Surprise Me!

நானும் அவரை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் - நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி

2026-02-26 0 Dailymotion

மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு வாழ்ந்த நூறாண்டுகளும் அவருக்கு என்ன பயன் என்று யோசிக்காமல் மக்களுக்கும் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கும் என்ன பயன் எடுக்க வேண்டும் அதை யோசித்து வாழ்ந்தவர் என்று தெரிவித்தார். இப்படிப்பட்ட தலைவர் வாழ்ந்த இந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது தனக்கு பெருமை என்றார். சுதந்திர போராட்டம் தொடங்கி அரசியலும் வாழ்க்கையிலும் எதிர்கொண்டு போராடிக் கொண்டே இருந்தார் என்றும் இன்று அவருடைய கடைசி மூச்சு வரைக்கும் போராடியவர் என்றும் அவருக்கு தான் சார்பாகவும் தன் குடும்பத்தின் சார்பாகவும் வீர வணக்கத்தை செலுத்திக் கொள்வதாக அவர் கூறினார்.